அரிசி ஆலையில் மோட்டார் திருடியவர் சிக்கினார்

Update: 2023-04-14 19:00 GMT

மத்தூர்:

மத்தூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 49). இவர் பள்ளத்து கொட்டாய் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். கடந்த 11-ந் தேதி அந்த ஆலையில் இருந்த 10 எச்.பி. திறன் கொண்ட 2 மோட்டார்களும், 5 எச்.பி. திறன் கொண்ட 2 மோட்டார்கைளும் திருட்டு போனது. இதுகுறித்து வேடியப்பன் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி மோட்டார்களை திருடியது அதே ஊரை சேர்ந்த சுந்தரவேல் (21) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்