திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி அருகே உள்ள சலுப்பனோடை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50).விவசாயி. இவர் தனது இருசக்கர வாகனத்தை திருப்பாச்சேத்தி பழைய ரைஸ்மில் அருகே நிறுத்திவிட்டு வயலுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து பெருமாள் திருப்பாச்சேத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.