சிவகங்கை அடுத்துள்ள மருதம்குடியைச் சேர்ந்தவர் சஞ்சீவி செல்வன் (வயது 27). இவர் அருகிலுள்ள சாத்தரசன்கோட்டையில் மளிகை கடை மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு யாரோ அவரது கடையை உடைத்து உள்ளே இருந்த கம்ப்யூட்டர், ஜெராக்ஸ் மிஷின், அரிசி மூடைகள், மளிகை பொருட்கள் மற்றும் ரூ.11 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். மேலும் இந்த கடையை ஒட்டி காட்டு ராஜன் (41) என்பவரின் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலையும் உடைத்த திருடர்கள் அங்கிருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள், அரிசி மூடைகளை திருடி சென்று விட்டனர். இது தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.