கோவில் விழாவில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2023-02-01 18:45 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே உள்ள தண்டுகாரம்பட்டி கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி கமலா (வயது 65) கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கமலா கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா கதறி அழுதார். மேலும் அவர் இந்த சம்பவம் குறித்து தொப்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்