பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடி அருகே உள்ள பொ.துறிஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அந்த பகுதியில் ஓட்டல் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் இந்த கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்த களிறு கண்ணன் என்பவரது வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் ஷட்டரை உடைத்து திருட்டு முயற்சி நடந்தது. இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.