ஓடும் பஸ்சில் 8 பவுன் நகைகள் திருட்டு

Update: 2022-12-13 18:45 GMT

அரூர்:

அரூர் அருகே உள்ள சிக்களூரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி லாவண்யா. இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்கள் கோட்டப்பட்டியில் இருந்து பஸ்சில் சேலத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த 8 பவுன் நகை திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்