ராயக்கோட்டை:
ராயக்கோட்டை அருகே உள்ள உள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 62). கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் உள்ள பீரோவில் 11 பவுன் நகை, மற்றும் ரூ.65 ஆயிரம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நகை மற்றும் பணம் நேற்று திடீரென திருடப்பட்டது. இதுகுறித்து அவர் உறவினர்கள் சிலரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் முனியப்பனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து முனியப்பன் ராயக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் முனியப்பனை தாக்கிய பெண்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.