கட்டிட தொழிலாளி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே வீரமலை பக்கமுள்ளது வி.புதூர். இந்த ஊரை சேர்ந்தவர் செந்தில் (வயது 32). கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 30-ந் தேதி இரவு செந்தில், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்தனர். அவர்கள் அங்கிருந்த இரும்பு பீரோவை திறந்து, அதில் இருந்த 9 பவுன் நகைகளை திருடி சென்றனர். மறுநாள் காலை 9 பவுன் நகை திருடப்பட்டிருந்ததை பார்த்து செந்தில் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செந்தில் வீட்டில் நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.