கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள்
கோவில் உண்டியலை மர்ம நபர்கள் தூக்கி சென்றனர்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ளது அடசிவயல் கிராமம். இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கோவில் கதவு திறந்து கிடந்தது கண்டு திடுக்கிட்டார்.
உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த 4 அடி உயர உண்டியலை காணவில்லை. மர்ம நபர்கள் தூக்கி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.