விழுப்புரம் அருகே வெல்டிங் பட்டறையில் திருட்டு

விழுப்புரம் அருகே வெல்டிங் பட்டறையில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-10-22 18:45 GMT


விழுப்புரம் அருகே உள்ள நன்னாட்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44). இவர் ஆழாங்கால்- பானாம்பட்டு செல்லும் சாலையில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையின் இரும்பு தகரத்தை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த வெல்டிங் மெஷின், கட்டிங் மெஷின், டிரில்லர், 350 மீட்டர் தாமிர கம்பிகள் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்