மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது.

Update: 2022-09-29 18:45 GMT

இளையான்குடி, 

இளையான்குடி சாலையூர் மைனர் தெருவில் வசிக்கும் சீனி முகமது மகன் ஜெய்னுல் ஜாகீர் (வயது 27). இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளையும், நண்பரான இளையான்குடி ஹவுத்அம்பலம் தெருவை சேர்ந்த பயாஸ் அகமது என்பவரது மோட்டார்சைக்கிளையும் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது 2 மோட்டார்சைக்கிள்களையும் காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செழியன் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிள்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்