இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள வாணி காலனியை சேர்ந்த முத்துமாரி மனைவி விஜய ராணி (வயது 34). இவர் அருகிலுள்ள தனது புதிய வீட்டில் இரவு தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் பழைய வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடி சென்றனர். காலையில் விஜயராணி எழுந்து பார்த்த போது பழைய வீட்டில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து இளையான்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்ே்பரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.