கருணை இல்லத்தில் ரூ.1 லட்சம் திருட்டு
கருணை இல்லத்தில் ரூ.1 லட்சம் திருடப்பட்டது.
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே ஆண்டிச்சியூரணி கிராமத்தில் புனித தெரசாள் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கருணை இல்லத்தில் உள்ள அருட்சகோதரிகள் மற்றும் மாணவிகள் அனைவரும் திருவிழா திருப்பலிக்கு சென்று விட்டனர். இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்து காளையார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.