அரசு பள்ளியில் 2 மடிக்கணினி திருட்டு

அரசு பள்ளியில் 2 மடிக்கணினி திருடபட்டது.

Update: 2022-08-29 18:18 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பீரோவில் வைத்திருந்த 2 மடிக்கணினிகள் திருடப்பட்டது. அதாவது மர்ம நபர்கள் பீரோ மேல் இருந்த சாவியை எடுத்து, அதனை திறந்து 2 மடிக்கணினிகளை திருடி சென்றனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பள்ளிபாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்