ஏ.டி.எம்.மில் ரூ.29 ஆயிரம் திருட்டு

ஏ.டி.எம்.மில் ரூ.29 ஆயிரம் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-08-25 19:22 GMT


விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 72). சம்பவத்தன்று இவர் மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது அவருக்கு பணம் எடுக்க தெரியாததால் ஒருவர் உதவி செய்வதுபோல் நடித்து போலி ஏ.டி.எம்.கார்டை கொடுத்து விட்டார். பின்னர் அந்த மர்மநபர் வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று முதியவரின் கார்டை பயன்படுத்தி 29 ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றார். சிறிது நேரம் கழித்து முதியவரின் செல்போன் எண்ணிற்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் இது குறித்து தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்