வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது.

Update: 2022-08-09 17:23 GMT

காரைக்குடி,

காரைக்குடி கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 60). இவர் துபாயில் வேலை பார்த்துவிட்டு சமீபத்தில் சொந்த ஊரான காரைக்குடி திரும்பினார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் ஒரு கிலோ வெள்ளி ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜரத்தினம் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்