கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து திருடப்பட்டது.

Update: 2022-08-09 17:17 GMT

காரைக்குடி,

குன்றக்குடி அருகே திட்டுமலை காளி கோவில் உள்ளது. இக்கோவிலில் நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்களையும், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் திருடிக்கொண்டு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்