காரிமங்கலம் அருகே பொக்லைன் எந்திரம் திருட்டு

காரிமங்கலம் அருகே பொக்லைன் எந்திரம் திருட்டு

Update: 2022-07-28 17:37 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அடுத்த அடிலம் சப்பாணிபட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 27). இவர் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விட்டு வந்தார். இவரிடம் கிருஷ்ணகிரி மாவட்டம் கொக்காரப்பட்டியை சேர்ந்த விஜயன் (29) என்பவர் டிரைவராக சேர்ந்தார். கடந்த மாதம் 1-ந் தேதி டிரைவர் விஜயன், ஜெயக்குமார் வீட்டில் இருந்து வழக்கம் போல் பொக்லைன் எந்திரத்தை எடுத்து சென்றார். வெகு நாட்கள் கடந்தும் பொக்லைன் எந்திரத்தை விஜயன் கொண்டு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஜெயக்குமார் அவரிடம் கேட்டபோது பொக்லைன் எந்திரத்தை பழுது பார்க்க விட்டிருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு மாதத்துக்கு மேலாகியும் பொக்லைன் எந்திரம் குறித்து எந்த தகவலும் வராததால் ஜெயக்குமார், விஜயன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் காரிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்