கடையின் பூட்டை உடைத்து பணம், கேமரா திருட்டு

கடையின் பூட்டை உடைத்து ரூ. 57 ஆயிரம் மற்றும் கேமராவை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-07-27 17:26 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கடையின் பூட்டை உடைத்து ரூ. 57 ஆயிரம் மற்றும் கேமராவை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருட்டு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள எஸ்.புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 32). இவர் தனது வீட்டின் அருகே ஸ்டூடியோ மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் கடையை பூட்டி விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

நேற்று அதிகாலை யோகராஜ் எழுந்து வந்து பார்த்தபோது கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அங்கு கடைக்குள் இருந்த ரூ. 57 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அவர், புழுதிபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீப காலங்களாக சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டார பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

எனவே சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் போலீசார் இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்