சாமி சிலை, வேல், குத்துவிளக்குகள் திருட்டு

திருப்புவனம் அருகே 3 கோவில்களின் பூட்டை உடைத்து சாமி சிலை, வேல், குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-07-23 17:36 GMT

திருப்புவனம்,


திருப்புவனம் அருகே 3 கோவில்களின் பூட்டை உடைத்து சாமி சிலை, வேல், குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

திருட்டு

சிவகங்ைக மாவட்டம் திருப்புவனம் அருேக கலியனேந்தல் கிராமத்தில் ஒரே வளாகத்தில் திருவேட்டை அய்யனார் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், விநாயகர் கோவில் ஆகியவை அமைந்து உள்ளன. திருவேட்டை அய்யனார் கோவில் பூசாரியாக உடையார் என்பவரும், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் பூசாரியாக குருநாதன் என்பவரும், பிள்ளையார் கோவில் பூசாரியாக வீரமகாளி என்பவரும் இருந்து வருகின்றனர்.

 வழக்கம் போல பூஜைகளை முடித்து விட்டு பூசாரிகள் கோவிலை பூட்டி சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கோவில் வளாகத்துக்குள் புகுந்து 3 கோவில்களின் பூட்டை உடைத்துள்ளனர். பின்னர் கோவில்களில் இருந்த 2 அடி உயர வெண்கல முருகன் சிலை, ஒரு அடி உயரம் உள்ள பித்தளை வேல், 20 பித்தளை குத்து விளக்குகள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பரபரப்பு

இந்த நிலையில் காலை கோவிலை திறக்க பூசாரி குருநாதன் வந்தார். அப்போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் மற்ற பூசாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். மேலும் இதுகுறித்து பழையனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்