கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2022-07-12 17:28 GMT

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே கிழவயல் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலி கருப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி கருப்பன் காலையில் வழக்கம் போல் கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, சில்லறை காசுகள் கொட்டி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்