கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது.

Update: 2022-07-06 19:56 GMT

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே எஸ்.கோபாலபுரம் கிராமத்தில் முனியாண்டி சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி நேற்று முன்தினம் வழக்கம் போல பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழுவினர் திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.




Tags:    

மேலும் செய்திகள்