5 பவுன் தங்க நகை மாயம்

5 பவுன் தங்க நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-17 15:53 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது22).இவர் ராமநாதபுரத்திலும் இவரது தம்பி தூத்துக்குடியிலும் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 2-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு சென்று உள்ளனர். பின்னர் மே மாதம் 20-ந் தேதி ஊருக்கு வந்து சாவியை வாங்கி வீட்டை திறந்து பார்த்தபோது வீட்டிற்குள் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து பவித்ரா பரமக்குடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து மாணிக்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்