ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு

ஓசூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.

Update: 2022-06-12 16:22 GMT

ஓசூர்:

ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் கணபதி சுப்பிரமணியம் (வயது53). இவர் பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 பவுன் நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து கணபதி சுப்பிரமணியம், ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்