வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
வீடு புகுந்து நகை, பணம் திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் முகமது இஸ்மாயில் (வயது53) என்பவர் தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்து 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 15,000-ஐ திருடி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் சாலைக்கிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.