கோவில் உண்டியல் திருட்டு
கோவில் உண்டியல் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே மகிபாலன் பட்டியில் உள்ள பூங்குன்றநாயகியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்றுமுன்தினம் இரவு புகுந்த மர்ம நபர் உள்ளே சென்றவுடன் கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் மாற்றி விட்டு உண்டியலை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடி சென்று உள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் சிவகங்கையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. சம்பவம் குறித்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.