மோட்டார் சைக்கிள் திருட்டு

மோட்டார் சைக்கிள் திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-27 20:39 GMT

மதுரை, 

மதுரை புதுஎல்லீஸ்நகர் சர்வோதய மெயின் ரோட்டை சேர்ந்தவர் கந்தன் (வயது 47). சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது டயர் பஞ்சர் ஆனது. டயர் பஞ்சர் பார்க்க மகபூப்பாளையத்தில் உள்ள கடையில் வண்டியை நிறுத்திஇருந்தார். சில மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது கடையில் நிறுத்தி வைத்து இருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்