மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள புட்டிரெட்டிப்பட்டியில் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. அர்ச்சகர் கோவிலை திறக்க வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.2 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செயல் அலுவலர் ராஜகோபால் கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.