தீரன் சின்னமலை நினைவு தினம்: ஈரோடு மாவட்டத்தில் 3-ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு

3-ந் தேதி உள்ளூர் விடுமுறை

Update: 2022-07-27 17:31 GMT

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி வருகிற ஆகஸ்டு மாதம் 3-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்