பெண்ணை தாக்க முயன்ற வாலிபர் கைது
பெண்ணை தாக்க முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் தெருவை சேர்ந்த பரமேஸ்வரனின் மனைவி இசபெல்லா (வயது 38). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ரெங்கநாதனின் மகன் மணிகண்டனுக்கும்(29) இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதில் இசபெல்லாவை மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இசபெல்லா புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.