பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி வாணியர் வீதியை சேர்ந்தவர் காத்தவராயன் மகன் பாலு(வயது 35). இவர் தீபாவளி பண்டிகை அன்று விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலு மீது அடிதடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே இவரது குற்ற செயலை தடு்க்கும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க விழுப்புரம் மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், பாலுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார். இதற்கான உத்தரவு நகல் சிறை அதிகாரிகள் மூலம் பாலுவிடம் வழங்கப்பட்டது.