நில அளவையரை மிரட்டிய வாலிபர் கைது
நில அளவையரை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை தாசில்தார் அலுவலகத்தில் வட்டார துணை நில அளவையராக பணியாற்றுபவர் கண்ணன் (வயது 52). இவர் நேற்று முன்தினம் அலுவலகத்தில் பணியில் இருந்தார். அப்போது முன்னீர்பள்ளத்தை சேர்ந்த பாலகணேஷ் (30) என்பவர் வந்தார். அவர் பட்டா மாற்றித்தரக்கோரி பல நாட்களாக கேட்டும் இதுவரை மாற்றிக்கொடுக்கவில்லை என்று கூறி கண்ணனிடம் தகராறு செய்தார். மேலும் அவரை பணிசெய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசை கைது செய்தனர்.