பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
பாளையங்கோட்டை அருகே பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டை அருகே உள்ள தாமரைச்செல்வி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் வீட்டை இட்டேரி பகுதியைச் சேர்ந்த சேர்மதுரை (வயது25) என்பவர் சேதப்படுத்தியது சம்பந்தமாக முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்தன்று முருகனின் மனைவி மட்டும் வீட்டில் இருக்கும்போது, அங்கு வந்த சேர்மதுரை மற்றும் அவருடைய கூட்டாளிகள் சேர்ந்து முருகனின் மனைவியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முருகனின் மனைவி முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி சேர்மதுரையை நேற்று கைது செய்தார்.