மணல் கடத்திய வாலிபர் கைது

திருவோணம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-09-14 20:12 GMT

திருவோணம் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 சரக்கு ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மணல் கடத்தல்

திருவோணத்தை அடுத்துள்ள வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரகத்திற்குட்பட்ட நெய்வேலி அக்னியாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரசாத் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நெய்வேலி பகுதியில் சரக்கு ஆட்டோக்களில் மணல் கடத்திய ஒரு கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் நெய்வேலி வடக்கு ஆவனாண்டிகொல்லை கிராமத்தைச் சேர்ந்த தேசேந்திரன் மகன் பாண்டீஸ்வரன் (வயது20) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சரக்கு ஆட்டோக்களையும் போலீசார் கைப்பற்றினர்.

வாலிபர் கைது; 5 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரனை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சரக்கு ஆட்டோக்களையும் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் சம்பவத்தின் போது தப்பியோடி தலைமறைவாகிவிட்ட ரமேஷ், ராஜஸ்ரீகரன், வினோத், அறிவழகன், அஜய் ஆகிய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்