காணாமல் போன கோவில் கலசத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

காணாமல் போன கோவில் கலசத்தை மீட்டு போலீசாரிடம் இளைஞர்கள் ஒப்படைத்தனர்.

Update: 2023-02-27 18:21 GMT

கந்தர்வகோட்டையில் ஆபத் சகாயேஸ்வரர் கோவிலின் அருகில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கலசம் காணாமல் போகி 6 மாதங்கள் ஆகிறது. இந்த நிலையில் வயல்வெளியில் சங்கூரணி தெருவை சேர்ந்த வாலிபர்கள் கதிரவன், விஜி, தவச்செல்வன், சித்திரைவேல் ஆகிய 4 பேரும் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பெரிய வயக்காட்டில் துணியில் சுற்றியவாறு கிடந்த கலசத்தை பார்த்து எடுத்தனர். பின்னர் அதனை மீட்டு கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மாறனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கலசத்தை தாசில்தாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து விசாரணை நடத்தியதில் கலசம் பிடாரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவில் பூசாரி பாலசுப்பிரமணியிடம் கலசம் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்