குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

சந்தையடி அருகே குளத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

Update: 2023-07-08 20:32 GMT

தென்தாமரைகுளம்,

சந்தையடி அருகே கவர்குளம் உள்ளது. இந்த குளம் சுற்று வட்டாரத்தில் உள்ள பொதுமக்களின் நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் இந்தகுளத்தை சந்தையடி, இடையன்விளை, வெள்ளையன்தோப்பு, கவர்குளம், கலர்குளம் தேரிவிளை, வடுகன்பற்று ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த குளம் முழுவதும் தாமரை, ஆகாயத்தாமரை போன்றவை வளர்ந்து காணப்பட்டது. இதனால் குளத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று குளத்தில் இறங்கி தாமரை மற்றும் ஆகாய தாமரைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இளைஞர்களின் இந்த செயலை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்