எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலி

எந்திரத்தில் சிக்கி வாலிபர் பலியானார்

Update: 2022-09-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அருகே உள்ள குறிச்சிராஜன் வாய்க்கால் பகுதியை சேர்ந்த மயிலான் மகன் ரவி. இவர் குறிச்சியில் உள்ள முத்துக்குமார் என்பவரது வயலில் எந்திரம் மூலம் வைக்கோல் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். ஆடுதுறை அம்மன்குடியைச் சேர்ந்த மாரியப்பன் (வயது 32) என்பவர் உதவியாளராக இருந்தார்.. நேற்று காலை வைக்கோல் கட்டும் எந்திரம் ஓடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாரியப்பன் எந்திரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாரியப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்