வாலிபரை தாக்கி நகை பறிப்பு

வாலிபரை தாக்கி மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர்

Update: 2023-06-23 00:37 GMT


மதுரை சிலைமான் கல்மேடு கருப்பபிள்ளையேந்தல் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 38). சம்பவத்தன்று இவர், தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை திருட முயற்சி செய்தனர். இதனை கண்ட அன்பரசன் தட்டிக்கேட்டார். அப்போது, அந்த நபர்கள் அன்பரசனை தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகையை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்