வாலிபரை தாக்கி நகை பறிப்பு
செய்யாறு அருகே வாலிபரை தாக்கி நகை பறித்து சென்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யாறு
செய்யாறு அருகே நாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 23), செங்கல்பட்டு அருகே பாலூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று மாலை வாழ்குடை ஏரி வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தார்.
அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த சரத், தினேஷ், வெங்கட், மோகன் ஆகியோர் பிரசாந்தை வழிமறித்து முன்விரோதம் காரணமாக சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் பிரசாந்த் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த பிரசாந்த் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் செய்யாறு போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.