அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி

கவுந்தப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-12 21:01 GMT

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கைகலப்பு

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள சூரநாய்க்கனூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுடைய மகன்கள் சதீஷ்குமார் (வயது 34), நகுலன் (27). இருவருக்கும் திருமணம் ஆகவில்ைல. குப்புசாமி ஏற்கனவே இறந்துவிட்டார். சதீஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் எந்தவேலைக்கும் செல்லாமல் மது குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் பக்கத்து வீட்டில் வசிக்கும் மாருசாமி, குப்புசாமி ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு உருவானது.

அரிவாளால் வெட்டினார்

சத்தம் கேட்டு வீட்டில் இருந்து வௌிேய ஓடிவந்த மகாலட்சுமியும், நகுலனும் சதீஷ்குமாரை தகராறு செய்யாதே என்று வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் அழைத்து சென்றனர். ஆனாலும் ஆத்திரம் குறையாத சதீஷ்குமார் மாருசாமியையும், குப்புசாமியையும் வெட்டிேய தீருவேன் என்று வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு வெளியே ஓட முயன்றார். அவரை மகாலட்சுமி தடுத்தார்.

அப்போது அவரை வெட்டுவதற்காக அரிவாளை சதீஷ்குமார் ஓங்கும்போது, நகுலன் ஓடிவந்து அண்ணனை பிடித்து அரிவாளை பறிக்க முயன்றார். அவரையும் வெட்டுவதற்காக சதீஷ்குமார் வந்ததால், நகுலன் அரிவாளை பிடுங்கி சதீஷ்குமாரின் கழுத்திலும், தாடையிலும் வெட்டினார். இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சதீஷ்குமார் துடிதுடித்து உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்ெபக்டர் சுபாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அதன்பிறகு சதீஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகுலனை கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை தம்பியே வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்