தூக்குப்போட்டு இறந்த வாலிபர்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2022-06-23 22:03 GMT

கொடுமுடி

ஈரோடு அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் துரைசாமி. இறந்துவிட்டார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பாலாஜி அம்பரீஷ் துரை (வயது 26). இவர் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் விடுதலையாகி வந்திருந்தார். இதைத்தொடர்ந்து இவர் தனது பாட்டி வீடான வடக்கு புதுப்பாளையத்தில் உள்ள தண்ணீர் பந்தல் வீதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலாஜி அம்பரீஷ் துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி அம்பரீஷ் துரையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்