மனைவி வளைகாப்புக்கு வந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை

அருப்புக்கோட்டை அருகே மனைவி வளைகாப்புக்கு வந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-24 19:15 GMT

அருப்புக்கோட்டை,

நாமக்கல் மாவட்டம் சின்னக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 31). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆமணக்கு நத்தம் கிராமத்தை சேர்ந்த புவனேசுவரி (27) என்பவரை திருமணம் செய்தார். இந்தநிலையில் புவனேசுவரி கர்ப்பமாக இருந்ததால் ஆமணக்கு நத்தத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.இந்தநிலையில் புவனேசுவரியின் வளைகாப்பிற்காக ஆமணக்கு நத்தத்திற்கு பிரபு வந்தார். அப்போது அவர் திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து பிரபுவின் தம்பி கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்