மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
ராமநாதபுரம் அருகே உள்ள வைரவனேந்தல் காருகுடி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் (வயது 20). இவர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள ஆதம் நகர் 1-வது தெருவில் தனியார் கல்லூரி ஒன்றில் ஏ.சி. பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பி மீது எதிர்பாராதவிதமாக உடல் உரசியதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். இது குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.