கடலூரில்நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் ஜவுளிக்கடைக்கு வந்த புதுப்பெண் மாயம்போலீசார் விசாரணை

கடலூரில் நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் ஜவுளிக்கடைக்கு வந்த புதுப்பெண் மாயானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Update: 2023-08-07 18:45 GMT


புதுச்சேரியை சேர்ந்தவர் 19 வயதுடைய கல்லூரி மாணவி. இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து, கடந்த மாதம் 16-ந் தேதி நிச்சயதார்த்தம் செய்தனர்.

இந்த நிலையில் அந்த பெண், தனக்கு புத்தாடைகள் எடுக்க வேண்டும் என வாலிபரிடம் கூறியுள்ளார். இதை நம்பிய வாலிபர், அந்த பெண்ணுடன் புத்தாடைகள் வாங்குவதற்காக புதுச்சேரியில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வந்தார். இதற்கிடையே ஜவுளிக்கடைக்குள் சென்ற அந்த பெண்ணை திடீரென காணவில்லை. இதனால் பதறிய வாலிபர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர் இதுபற்றி அந்த வாலிபர், பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அவர்கள் விரைந்து வந்து, மாயமான தங்கள் மகளை கண்டுபிடித்து கொடுக்கும்படி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிச்சயிக்கப்பட்ட வாலிபருடன் ஜவுளிக்கடைக்கு வந்த புதுப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்