முறையாக வேலை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மறியல்

முறையாக வேலை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-11 20:44 GMT

மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த காடபிச்சம்பட்டி பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் முறையாக வேலை வழங்கப்படாததை கண்டித்தும், முறையாக வேலை வழங்கிட வலியுறுத்தியும் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்