விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சாவு

திண்டுக்கல் அருகே கார் மோதி படுகாயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-02-07 19:00 GMT

சிவகங்கை காளையர் கோவிலில் இருந்து காரில் 7 பேர் பெங்களூரு நோக்கி கடந்த 31-ந் தேதி சென்று கொண்டிருந்தனர். காரை பெங்களூருவை சேர்ந்த அருள்வினோத் ரோசாரியா என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை புதுப்பட்டி அருகே வந்தபோது, திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சன்னாசி (வயது 50) என்பவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் போட்டார். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பெங்களூரை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பலியானார். இதற்கிடையே கார் வேகமாக வந்த பதற்றத்தில் கீழே விழுந்து சன்னாசி படுகாயமடைந்தார்.

பின்னர் படுகாயமடைந்த சன்னாசி உள்பட 6 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சன்னாசி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சன்னாசி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்