தொழிலாளியை கரடி துரத்தியதால் பரபரப்பு

கோத்தகிரி அருகே தொழிலாளியை கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கரடியை பிடிப்பதற்காக கூண்டு வைக்கப்பட்டது.

Update: 2022-07-23 13:52 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் 3 கரடிகள் அட்டகாசம் செய்து வந்தன. இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் 2 கரடிகள் கூண்டில் சிக்கின. மற்றொரு கரடி கூண்டில் சிக்காமல் அங்கிருந்து தப்பி சென்றது. இதை தொடர்ந்து தப்பி சென்ற கரடியை பிடிப்பதற்காக அதே பகுதியில் மீண்டும் கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. ஆனால், அந்த கரடி மற்ற கரடிகளை தேடியவாறு குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வந்த வண்ணம் உள்ளது.

இந்தநிலையில் குன்னியட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஹாலன் தேயிலை தோட்டத்தில் பறித்த இலை மூட்டைகளை சுமந்து சென்றார். அப்போது அவரை கரடி துரத்தியது. அவர் மூட்டைகளை கீழே போட்டு விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது. எனவே, கரடியின் நடமட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்