தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற மனைவிக்கு ஆயுள் தண்டனை

குடிபோதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்து கொலை செய்து கல்லை கட்டி உடலை தண்ணீரில் போட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-29 18:45 GMT

சிவகங்கை,

குடிபோதையில் தகராறு செய்த கணவரை கட்டையால் அடித்து கொலை செய்து கல்லை கட்டி உடலை தண்ணீரில் போட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை கோர்ட்டு உத்தரவிட்டது.

குடிபோதையில் தகராறு

சிவகங்கையை அடுத்துள்ள சாத்தரசன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராணி (44). ராமச்சந்திரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்வாராம். கடந்த 2014-ம் ஆண்டு மே 10-ந் தேதி ராமச்சந்திரன் குடி போதையில் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தினர் அவர்களை சமரசம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் அன்று இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த ராணி கீேழ கிடந்த கட்டையால் ராமச்சந்திரனை அடித்துள்ளார். பலத்த காயமடைந்த ராமச்சந்திரன் இறந்து போனார்.

ஆயுள்தண்டனை

இதனை தொடர்ந்து ராணி, ராமச்சந்திரன் உடலை இழுத்து சென்று வீட்டின் அருகே உள்ள ஒரு குட்டையில் உடலில் கல்லை கட்டி போட்டு விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர். மேலும் அவர் மீது சிவகங்கையில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பிரபாகர் ஆஜரானார்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி சத்தியதாரா, குற்றம் சாட்டப்பட்ட ராணிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராமச்சந்திரன் உடலை மறைத்த குற்றத்திற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்