லாரியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலி

பேரணாம்பட்டு அருகே லாரியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி சக்கரத்தில் சிக்கி பலியானார்.

Update: 2023-02-27 13:37 GMT

பேரணாம்பட்டு அருகே உள்ள சிவனகிரி கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அதன் கழிவுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு பேரணாம்பட்டு நோக்கி புறப்பட்டனர். லாரியை கும்பகோணத்தை சேர்ந்த டிரைவர் குமார் (வயது 28) என்பவர் ஓட்டிச் சென்றார். லாரியில் 4 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். லாரி சென்று கொண்டிருந்தபோது இடது பக்க கதவு சரியாக மூடாததலால் லாரியில் பயணம் செய்த பேரணாம்பட்டு டவுன் பூங்கா வீதியைச் சேர்ந்த நரேஷ் (27) என்ற தொழிலாளி தவறி கீழே விழுந்தார்.

அப்போது அவர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறியது. உடனே டிரைவர் குமார் தப்பியோடி விட்டார். இதில் படுகாயமடைந்த நரேஷ் உடனடியாக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்ப முயன்ற போது பரிதாபமாக இறந்துவிட்டார்.

இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடி தலைமறைவான டிரைவர் குமாரை தேடிவருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்