நடைபயணமாக சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

கிறிஸ்தவ ஆலயத்திற்கு நடைபயணமாக சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து இறந்தார்.

Update: 2023-03-28 18:40 GMT

நெல்லை பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மரிய ஜெயபால் (வயது 36). கூலி தொழிலாளியான இவர் பேட்டையில் இருந்து புளியம்பட்டி கிறிஸ்தவ ஆலயத்திற்கு நடை பயணமாக சென்று கொண்டிருந்தார். நேற்று காலையில் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்